விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 18.08.2025 அன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தாளாளர் முனைவர் கணேசன், துணைச் செயலாளர் முனைவர் விக்னேஷ் குமார், நிர்வாகி திரு. அபிஷேக் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரை வழங்கினார்.

முதல்வர் முனைவர் எம். சேகர் அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் பேராசிரியர்களை அறிமுகப்படுத்தினார். தாளாளர் மாணவர்களை தொழில்முனைவர்களாக வளர வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிர்வாகி அபிஷேக் பாண்டியன், மாணவர்கள் குறிக்கோளை நினைவில் கொண்டு பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஊக்குவித்தார். நிகழ்ச்சி நன்றியுரையுடன் நிறைவுற்றது.
