விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தாயில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாவட்ட நிர்வாகி ஈஸ்வர பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மேடையில் இருந்த மணமக்களை வாழ்த்தியதுடன் மணமக்களுக்கு இல்லற வாழ்க்கை குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கிய பின்னர் பொதுமக்களையும் ரசிகர்களையும் சந்தித்து பேசினார். கட்சி நிர்வாகிகள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.