• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து நெருக்கடிகளால் பொதுமக்கள் அவதி..,

ByKalamegam Viswanathan

Aug 20, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வியாபாரம் நிமித்தமாகவும் பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.

தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சோழவந்தான் நகரம் ஆக்கிரம்புகளாலும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் சிக்கி திணறி வருகிறது குறிப்பாக பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் குருவித்துறை மன்னாடிமங்கலம் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சோழவந்தான் நகருக்குள் வந்து வெளியேறி செல்வதில் தாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் மதுரை திருமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களும் மாரியம்மன் கோவில் வழியாக செல்வதால் இதன் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சோழவந்தானில் ஒருவழிப் பாதையாக மாற்றி வாகனங்களை மார்க்கெட் ரோடு பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே பீட்டர் ரோடு வட்டப் பிள்ளையார் கோவில் வழியாக வெளியேறி செல்ல காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக மார்க்கெட் ரோடு பகுதியில் எதிரெதிரே வரும் வாகனங்களால் பல மணி நேர போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் பகுதியில் ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் மற்றும் முக்கியமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.