• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாமரத்துக்குள்ளே மாடி வீடு..!

Byவிஷா

Dec 11, 2021

வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமாக இருந்து வரும் நிலையில், மரத்தை வெட்டாமல், மரத்திலேய கட்டியிருக்கும் அதிசய வீட்டைப் பார்ப்பவர்களின் கண்களைப் பரவசப்படுத்துகிறது.


ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர், 2000-ம் ஆண்டு நான்கு மாடி வீட்டைக் கட்டினார். 80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?


இந்த வீடு ‘ட்ரீ ஹவுஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. காட்டில் வசிப்பவர்கள் கட்டுவது போல் மரத்தால் ஆன வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு ‘ஃபுல் ஃபர்னிஷ்டு’ வீடு என்று சொல்லலாம்.

இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டைக் கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை.
மரக்கிளைகளுக்கு ஏற்ப தன் கனவு வீட்டை வடிவமைத்திருக்கிறார் கே.பி.சிங். ஒரு மரக்கிளையை சோபா ஸ்டாண்டாகவும், ஒரு மரக்கிளையை டிவி ஸ்டாண்டாகவும் பயன்படுத்தினார்.

இந்த வீட்டில் சமையலறை, படுக்கையறை, குளியலறை, சாப்பாட்டு அறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டை உருவாக்க எஃகு, செல்லுலார் மற்றும் ஃபைபர் தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசினால், இந்த வீடும் மரக்கிளைகளைப் போலவே ஆடும்.