கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு முகாம்களில், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மக்களிடையே மனுக்களை நேரில் வாங்கி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அவர், கரூர் மாவட்ட அளவில் மக்களுடைய கோரிக்கைகளை இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உடனடியாக நிறைவேற்றி வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் அதற்கு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் கூறிய முன்னாள் அமைச்சர், கரூர் மாநகராட்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய சுற்றுவட்ட சாலையான ரிங் ரோடு திட்டம் கோவை சாலை தொடங்கி, ஈரோடு சாலை, ஈரோடு சாலை டூ கரூர் சேலம் பைபாஸ் சாலை என்றும் அதிலிருந்து வாங்கல் சாலை, நெரூர் சாலை தொடர்ந்து அதனை சுற்றி வீரராக்கியம் சாலை சென்று பின்னர் இணைக்கின்றது.

இந்த திட்டத்திற்காக கருத்துரு அரசுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதில் முதல்கட்டமாக ஈரோடு சாலை தொடங்கி, மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலை வரை நிலம் எடுப்பதற்காக 72 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக கரூர் டூ சேலம் தேசிய நெடுஞ்சாலை தொடங்கி, நெரூர் 16 கால் மண்டபம் வரையிலான ரோட்டிற்கு நிலம் எடுப்பதற்கான திட்டம் அரசுக்கு அனுப்பட்டுள்ளது. ஆகவே முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 29 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த திட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத கரூர் உருவாக்க, தமிழக முதல்வர் இந்த திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.
இதே போல, நெரூர் – உன்னியூர் உயர்மட்டப்பாலப்பணிகள், சாலைப்பணிகளின் வேலை நடைபெற்று வருவதால் விரைவில் அந்த பாலத்தினை, தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது என்றும், பின்னர் பேசிய செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட பெண்மணி ஒருவர் தனது கணவர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாக, அந்த நகராட்சியின் திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான அந்த புகார் மனுவை அளித்த பெண்மணியுடன் சேர்ந்து அதிமுக வின் வழங்கறிஞர் ஒருவர் செய்தியாளரை சந்தித்தார். நம்பத்தகாத செயலில் அதிமுக வின் வழக்கறிஞருக்கு அங்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியதோடு, இதில் தேவையில்லாத அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.