விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தாயில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சாக்குப் பையுடன் இருப்பதை பார்த்து சாக்குப்பையை சோதனை இட்டார்.

அதில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் 90 விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது உடனடியாக மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கோட்டையூரை சேர்ந்த முத்து (வயது 45 ) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.