கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தின் நான்காம் கட்டமாக மதுரைக்கு வருகிறார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களை அழைக்கும் வகையில் முதல் கட்டமாக 25000 கடிதங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்களுக்கு அனுப்பும் வகையில், மதுரை தமுக்கத்தில் உள்ள தபால் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தமிழரசன், எஸ் எஸ் சரவணன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், அன்னபூர்ணா தங்கராஜ், தன்ராஜ், புளியங்குளம் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
ஆர் பி உதயகுமார் கூறியதாவது
இன்று கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறந்த நன்நாள் தீமைகளை அழித்து நன்மைகளை மலர் செய்த நாள் அதேபோல இந்த மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும் நாளாக அமையும்.
இன்றைக்கு விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும், திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதும் வகையில் எடப்பாடியார் எழச்சி பயணத்தில் மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமாக முடித்துக் கொண்டு நான்காம் கட்டமாக மதுரை மாவட்டத்திற்கு எடப்பாடியார் வெற்றி சரித்திரம் படைக்கு வகையில் இருக்கும் .

மதுரையில் எழுச்சி பயணம் ஒரு திருப்புமுனையாக அமையும் இதனை தொடர்ந்து எடப்பாடியார் எழுச்சி பயணத்தின் மக்களை அழைக்கும் வகையில் இல்லந்தோறும் எடப்பாடியார் என்ற தாரக மந்திரமாக குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நேரில் அழைப்பு விடுத்தோம் .இதனை தொடந்து தற்போது முதல் கட்டமாக 25 000 பேருக்கு கடிதம் மூலம் அழைப்புகளை அனுப்பி வருகிறோம்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் அமைத்த அடித்தளத்தில் தான் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக சத்துணவு திட்டம், மாணவர்களுக்கு 14 வகை உபகரணங்கள் , மடிக்கணினி திட்டம் இது போன்ற திட்டத்தினால் தான் இந்தியாவில் தமிழகம் கல்வி முதல் இடத்தில் உள்ளது
கலை அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி,தொழில் கல்லூரி ஆகிய கல்லூரியில் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள், ஆனால் இன்றைக்கு 79 சுதந்திர தின விழாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கூட கொடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கி ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள், இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம் என்பதை வெள்ளை அறிக்கை விட வேண்டும். அதேபோல மூனறை லட்சம் அரசு காலிபணியிடங்களை நிரப்புவோம், இரண்டு லட்சம் புதிய அரசு வேலையை உருவாக்குவோம் என ஐந்தரை லட்சம் பணியிடங்கள் நிரப்பும் என்று கூறிவிட்டு தற்போது 20,000 பணியிடங்களை தான் நிரப்பி உள்ளார்கள் .
இன்றைக்கு தமிழகத்தில் வறுமை அதிகரித்து விட்டது ,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடனனை ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் எதையும் செய்யவில்லை. 79 ஆண்டுகளில் இந்தியாவிலே கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது ஐந்து லட்சம் கோடி கடன் இருந்தது மேலும் தற்போது 4.50 லட்சம் கோடி கடனை வாங்கி விட்டார்கள்
கடன் சுமையை குறைக்க குழுக்களை அமைத்தார்கள் அதெல்லாம் என்ன ஆனது?
சுதந்திர தின முறையில் மக்களுக்கு திட்டங்களை அறிவிப்பார்கள் ஆனால் இந்த சுதந்திர தின விழாவில் உப்பு சப்பாக உரையாகஇருந்ததுமக்களுக்கு
ஏமாற்றும் உரையாக தான் உள்ளது.
இன்றைக்கு பெயிலியர் மாடல் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது இன்றைக்கு எடப்பாடியார் எழுச்சிபயணம் வரலாற்று திருப்புமுனையாகவும், ஆட்சி மாற்றத்துக்கு அமையும் பயணமாக இருக்கு
முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார் ஆனால் இங்கே இருக்கு கம்பெனிக்கு அங்கு சென்று ஒப்பந்தம் போடுகிறார் இதனால் முதலமைச்சருக்கு களம் நிலவரம் தெரியவில்லை உள்நாட்டில் முதலீட்டை தக்கவைக்க கொள்ள முடியவில்லை வெளிநாட்டு பயணத்தால் எந்த பலனும் தமிழ்நாட்டுக்கு இல்லை.

அதிமுக மாபெரும் இயக்கம் இந்த இயக்கம் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் காலங்களில் வெற்றியும் கண்டுள்ளது, பின்னடைவு கண்டுள்ளது .இன்றைக்கு எடப்பாடியார் அம்மாவின் ஆட்சி மலர ஒரு தியாகச் சீலர் போல உழைத்து வருகிறார். அதிமுக பல சோதனை கண்டு முடிவில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிமுக சிதறிய தேங்காய் போல சிதறி மீண்டும் ஆட்சி அமைத்த வரலாறும் உண்டு.
புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கம் நூறாண்டுகள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தார், அவர் எண்ணத்தை எடப்பாடியார் நிறைவேற்ற அயராது உழைத்துக் கொண்டு வருகிறார், இன்றைக்கு அதிமுகவில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு எடப்பாடியாருக்கு கரம் கொடுத்து உழைத்து வருகிறோம்.
தூய்மை பணியாளர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரந்தரம் செய்தோம் என்ற கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை நன்றி அறிவிப்பு கூட ஒரு செட்டப் நாடகம் தான், நன்றி கோசத்தை உள்ளே தான் போட வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போட்டுக் கொண்டு சென்றார்கள் உண்மை ஒருநாள் சுடும்.
இன்றைக்கு எடப்பாடியார் ஒரு சாமானிய விவசாயி மகன், எந்த அரசியல் பின்புலம் இல்லை பொதுவாழ்வில் தன் உழைப்பால் இன்றைக்கு உச்சத்தை தொட்டு உள்ளார். இதன் மூலம் இன்றைக்கு திமுகவிற்கு செம்ம சொப்பனமாக மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளார். இன்றைக்கு ஆளும் திமுக கட்சி அவலநிலையை தோலுரித்து காட்டி வருகிறார். எடப்பாடியாரை யாரும் குறைத்து மதிப்பிட்டால் தோல்வி தன் பெறுவார்கள். எடப்பாடியாரை யாரும் வென்றதாக சரித்திரம் இல்லை எனக் கூறினார்.