விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுச சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது .இக் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதியில் தொழில் அபிவிருத்திக்காக ஏராளமான தொழிலதிபர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் .

தொடர்ந்து காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் ,பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.