இந்திய பெரும் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வேலண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி எம் பவுண்டேஷன் சார்பாக 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் சேவாரத்னா டாக்டர் எம் சிவராமன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் குழந்தைகள் சுகந்திரதேவி,சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய வேடங்களில் ஆடைகளை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். மேலும் இந்த நிகழ்வில் அனுசியா சிவராமன்,மற்றும் கனநாதன் மதரகவி,
சிவ பாலன்,சிவக்குமார், நடராஜன், அன்புராஜ்,நரேஷ் குமார்,ராஜா, கிருஷ்ணன், ஷியாம் ஜெயபால், லட்சுமணன், குணசேகரன், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.