மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் ஐ.ஏ.எஸ்., நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.,

மேலும் உசிலம்பட்டி கிளை சிறைச்சாலையிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்த உதவி ஆட்சியர், சிறைவாசிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக தேசிய கொடியை ஏற்றி வைக்க குடும்பத்துடன் வருகை தந்த உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் – யை உசிலம்பட்டி வட்டார கிராமய கலைஞர்கள் மேளதாளங்களுடன் வரவேற்று அழைத்து வந்தனர்.