மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் நிறுவனர் கருணாநிதி தலைமையில் மனு அளித்தனர்.

அதில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளது மேலும் ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்று உயர்நிதி மன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்கள். இதை வன்மையாக கண்டிப்பதாகவும்,
1931ல் லண்டன் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் மலை முருகன் மலை என தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். எனவே லண்டன் தீர்ப்பை உடனே அமல்படுத்தக்கோரியும் அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் சார்பில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் நிறுவனர் கருணாநிதி கூறும்போது 1931ல் லண்டன் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் மலை முருகன் மலை என தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ளதை அகண்ட இந்து ராஷ்டிரா அமைப்பின் சார்பில் கண்டிப்பதாகவும்.
இதை கண்டித்து வருகிற 17ம்தேதி பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அனைத்து இந்து அமைப்பினையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.








