தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 171 வது திரைப்படமான கூலி பேன் இந்தியா மூவியாக இந்தியா முழுவதும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள பல திரையரங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சி மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ் தலைமையில் ஆண்கள், பெண்கள் என ரசிகர்கள் ஏராளமானோர்
விடியற்காலை முதல் திரையரங்கு முன்பு காத்திருந்து திரைப்படத்தின் கட் அவுட்ற்கு பாலாபிஷேகம் செய்தும், பூசணிக்காய் மற்றும் திருஷ்டி தேங்காய் சுற்றி உடைத்து, சூடமேற்றி வெடி வெடித்து ஆரவாரத்துடன் தலைவர் ரஜினி வாழ்க, உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க என்ற கோஷத்துடன் ஆடி, பாடி கொண்டாடினர்.
.இதுகுறித்து பேட்டியளித்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ்.
ஐம்பதாவது பொன் விழா ஆண்டில் 171 வது திரைப்படமாகக கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் திரைக்கு வெளிவந்துள்ளது. திரைப்படத்தை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் விரதம் இருந்து மன்சோறு பால்குடம் என்கிட்ட நேத்து கடன்களை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைய உதவிகளை செய்து வருகிறார் அவர் செய்து வரும் உதவிகள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் இருக்கிறார். அவர் ஒன்றுமே எங்களுக்கு ரோல் மாடல்.இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகைகளும் காத்திருந்து திரைப்படத்தை காண வந்துள்ளனர்.








