விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில்
மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பேட்மிண்டன், செஸ் போட்டிகள் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ல் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதில் செஸ் போட்டியில் மதுரை பாத்திமா கல்லூரி அணியும், டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி மாணவியர் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.