• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நயன்தாரா படம் என்ன விலைக்கு போனது தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படம் உருவாகிவருகிறது.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும், ஒரு சில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம். தற்பொழுது, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

ஆரம்பத்தில், இப்படம் ஓடிடிக்கு வருமென்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்படி, படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட இருக்கிறது படக்குழு.

இந்தப் படத்துக்கான சேட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டினையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் 21 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவே வியாபார
வட்டாரங்களில் கூறப்படுகிறது.