முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு நாளையொட்டி, சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்டத்தில், இன்று காலை ஜெ. நடராஜன் தலைமையில், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல தலைவர் மற்றும் பகுதி செயலாளர் என். சந்திரன் (எம்.சி.) சிறப்பாக பங்கேற்று, நிகழ்ச்சியை மரியாதையுடன் முன்னெடுத்தார்.
பின்னர், ஆலந்தூர் தெற்கு பகுதி எம்.ஜி.ஆர் சாலை அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில், மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்பாளர்,துணை அமைப்பாளர்,துணை பொது அமைப்பாளர்,துணை நிர்வாகிகள்,பகுதி நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள்,மண்டல உறுப்பினர்கள்,கழக தொண்டர்கள் என திரளாக பங்கேற்று, கலைஞரின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.