• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 6, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வைகைஅணையில் தற்பொழுது முழுக்கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தும் தண்ணீர் திறக்ககோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.

இது வரை உரிய நடவடிக்கைகள் இல்லாததால் சங்கத்தின் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பாகவும் அனைத்துகட்சிகள் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள சங்கங்கள் சார்பாகவும் வருகின்ற எட்டாம் தேதி உசிலம்பட்டி தேவர்சிலை சிலை அருகில் பஸ்மறியல் செய்வதென ஏகமனதாக முடிவெடிக்கப்பட்டது.

இரண்டாவதாக 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தை நீர்பாசன கால்வாயாக மாற்றவும், ஆண்டுதோறும் தண்ணீர் பெறும் வகையில் வைகைஅணையில் 60 அடியில் மதகை மாற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது,
கூட்டத்தில் தலைவர் ஜெயராஜ். துணைதலைவர் மகாராசன். செயலாளர் சிவப்பிரகாசம். துணை செயலாளர் ஆதிசேடன். இரும்புத்துரை. பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து கண்மாய் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.