• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி..,

ByV. Ramachandran

Aug 6, 2025

ஆலங்குளம் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் முழுவதுமாக பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக நீர்மூழ்கி மோட்டார் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று நீர்மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன் லால் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் வாசகர் வட்ட தலைவர் தங்க செல்வம் சமுக ஆர்வலர் மருதப்புரம் அருண் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

வருகை தந்த அனைவரையும் சமூக ஆர்வலர் சோனா மகேஷ் வரவேற்று பேசினார்.

முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் மருத்துவரின் கோரிக்கையை ஏற்று சுமார் 25,000 மதிப்புள்ள நீர் மூழ்கி மோட்டார் மற்றும் தளவாடச் சாமான்களை தலைமை மருத்துவர் அருள் பிரகாஷ் அவர்களிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மோகன்லால் மாவட்ட விவசாய அணி தலைவர் செல்வன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பொன்னரசு, சிம்சோன்ராஜ் , தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொன் மோகன்ராஜ், முன்னாள் மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் , குலைய நேரி முன்னாள் கவுன்சிலர் திருமலை குமார் ஆனைகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலீல் ரகுமான் இரட்டை குளம் செயலாளர் மாடசாமி, அருணாசலம்,ஜோசப் முருகேசன், வேலுச்சாமி, பொன்ராஜ், பொன் ராஜ்குமார், ராஜபாண்டியன், ஏ பி என் குணா ,சிவா மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்த் திலக் கந்தசாமி, காங்கிரஸ் நிர்வாகி நடராஜன், அருணகிரி மாணவரணி கவாஸ்கர் இளைஞரணி, இம்ரான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செவிலின் கமாலா தேவி உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் அவர்கள் நன்றி கூறினார்.