கோவை மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரகாஷ் , விஜய சாந்தி தம்பதிக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த போது வீரம்மாள் என்கிற ஆனந்தி சிந்து(32) , தம்பதியிடம் குழந்தையை பெற்று விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.
தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 4 ஆவதாக பிறந்த இந்த குழந்தையை விற்க முயன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.