• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மனு..,

ByKalamegam Viswanathan

Aug 5, 2025

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத் திறனாளிகள் 1000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

அவர்களுக்கு அரசு சார்பில் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டால் இயல்பான மனிதர்களாக மாறி சாதனை படைப்பார்கள். அதற்கான உதாரணங்களாக உலகிலும், நம் நாட்டிலும் பிரபலங்கள் உள்ளனர். மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளது போல இத்தகைய குழந்தைகளுக்கு சிறப்பு திறன் வளர்ப்பு பள்ளியும், பருவ வயதுடையோருக்கு அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தொழிற்பயிற்சி மையங்களும் அரசு சார்பில் ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், இ.ஆ.ப., நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினேன் என்றார்.