• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

முருகன் கோவிலில் முதல்வரின் மனைவி ..,

ByKalamegam Viswanathan

Aug 4, 2025

தமிழக முதல்வரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தடைந்தார்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக செயல் அலுவலர் சூரிய நாராயணன் வாழ்க வளர்க குழு தலைவர் சத்யபிரியா மற்றும் கோவில் ஸ்தானிக பட்டர்கள் திருக்கோவிலுக்கு கருவறைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

சுமார் 25 நிமிடம் சாமிதரிசனம் செய்து துர்கா ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார். அவரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா செயல் அலுவலர் சூரியநாராயணன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.