திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட விருந்து வைத்தார் அந்த விருந்தில் பங்கேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர்

மேடைகளில் தான் அரசியல் நிகழ வேண்டும் என்று அல்ல விருந்து தட்டுகளில் கூட அரசியல் நிகழலாம், நாங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம் எங்கள் கூட்டணியை பார்த்து சிலருக்கு அஜீரணம் ஏற்பட்டிருக்கிறது, இந்தக் கூட்டணி அடிமை கூட்டணி என்றெல்லாம் பேசுகிறார்கள் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை,
முதல்வர் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்க தூத்துக்குடி சென்று இருக்கிறார் இந்த நிறுவனத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ,
6 1/2 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்களிக்க போகிறார்கள் என்று பொய்யான செய்தியை உள்துறை அமைச்சராக இருந்தவர் கூறுகிறார்,
வேறு நாட்டில் இருந்தெல்லாம் இந்தியாவிற்கு வந்து வாக்களிக்கலாம் ஆனால் வேறு மாநிலத்திலிருந்து வாக்களிக்கக் கூடாதா.? பிரியங்கா காந்தி அங்கிருந்து இங்கு தேர்தலில் நிற்கும் பொழுது அங்கிருந்து இங்கு வந்து வாக்களிக்க கூடாதா தமிழிசை கேள்வி?
கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலையத்துறை செயலாற்றுகிறது, எந்தப் பணியும் நிறைவு செய்யாமல் அவசரமாக குடமுழுக்கு நடத்துகிறார்கள் இன்று உயர் நீதிமன்றம் கூறி இருக்கிறது.
நன்றியை எப்படி திமுகவிற்கு தெரிவிக்க முடியும் என்று தேடித்தேடி கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வருகிறார் , முதலில் மொழி பிரச்சனையை கொண்டு வந்தார், இன்று மீண்டும் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார் என்று கூறினார்.