கோயம்புத்தூரின் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ‘அஸ்மிதா வுஷு மாநில லீக் 2025-26’ போட்டியில், சென்னை மாவட்டம் சிறப்பாகப் பங்கேற்று, மாநில அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 32 மாவட்டங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் தங்களது திறமை, தைரியம் மற்றும் கடுமையான முயற்சியின் மூலம் வெற்றியைப் பெற்றனர்.
தங்கம் – 11,வெள்ளி – 8,செம்பு – 5 என மொத்தம் 24 பதக்கங்களை சென்னை அணி வென்றுள்ளது.
இந்தச் சாதனையின் மூலம், சென்னை வீரர்கள் நாட்டளவிலான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி, மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்திற்கும், விளையாட்டுத் துறையில் உறுதி மற்றும் தாராள மனப்பான்மைக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது.

பயிற்சியாளர்கள், ஆதரவு குழுவினர் மற்றும் பெற்றோர்களின் துணை, வீரர்களின் கடின உழைப்பை நன்கு உறுதிப்படுத்தும் வகையில் இந்த வெற்றியின் பின்னணி அமைந்துள்ளது.