நாடாளுமன்றத்தை அனைவரும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். தற்பொழுது உள்ளிருந்து பார்க்கிறேன். அதன் கடமை மற்றும் பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமை புரிகிறது.

என்னுடைய முனைப்பு நாடு , தமிழ்நாடு. அதுதான் என் பொறுப்பு. அதற்காகத்தான் இங்கிருந்து சென்று இருக்கிறேன். இது ஒரு முக்கியமான பொறுப்பாக நான் நினைக்கிறேன். சரிவர கடமைகளை செய்வேன்.
அங்கு என்ன பேசப் போகிறேன் என்பது குறித்து இங்கு சொல்ல முடியாது . நான் நாடாளுமன்றத்தில் பேச தொடங்கிய பிறகு அது குறித்து விவாதிக்கலாம்.
ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பில் இருந்து நடைபெற்று வருகிறது.அதன் அடி நாதம் நமது சமூக அமைப்பு அதனை மாற்ற வேண்டும்.
கட்சிகள் வரும் போகும் நாடு நடந்து கொண்டுதான் இருக்கும் என தெரிவித்தார்.