சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பாக ஐம்பெரும் விழா 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர் செட்டிபாளையத்தில் அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதி அரசர் A.J. முருகானந்தம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட நடிகர் விக்னேஷ், சர்வதேச துணை தலைவர் லீமா ரோஸ், தேசிய கெளரவ தலைவர் நசீர், தேசிய துணை தலைவர் R.G.சேகர், தேசிய ஊடக தலைவர் சர்வோதய ராமலிங்கம் (சன் டிவி செய்தி வாசிப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டு சட்டம் சார்ந்த விஷயங்கள், சமூதாய களப்பணிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநிலம் மற்றும் அனைத்து மாவட்ட மகளிர் அணி வரவேற்புரை வழங்கினார்கள். மேலும் மாநில பொதுச்செயலாளர் கார்த்திக், மாநில மகளிர் அணி தலைவர் ஜூலி தனபால், மாநில இணைச்செயலாளர் ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் நதீம் கலந்து கொண்டார்.
நடைபெற்ற ஆறாம் ஆண்டு விழாவில் சிறப்பு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், சமூக சேவைக்கான விருதுகள், ஐடி கார்டு வழங்குதல், புதிய மாவட்டம் அறிமுகம் என்று ஐம்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சர்வதேச நிர்வாகிகள், தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மருத்துவ நிர்வாகிகள், மாற்றுத்திறனாளி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 21 மாவட்டங்கள் இணைந்து ஒரே இடத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த சமூக சேவைக்கான 2025 ம் ஆண்டின் விருதை மதுரை மாவட்டத்தை சார்ந்த மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு, கௌரவத் தலைவர் ஜெயகுமார், மாவட்ட செயலாளர் எட்வர்ட், மாநகர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சந்தியா ராணி ஆகியோர் விருதை பெற்றார்கள். மேலும் இவர்களுடன் மாவட்ட பொருளாளர் உமா சங்கர், மாநகர் ஒருங்கிணைப்பாளர் முகமது ரஃபிக், மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ், தமிழ் நாடு ஐடிஐ வைஸ் பிரின்ஸ் பெல் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் காளீஸ்வரி, பிரியங்கா, ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஒவ்வொரு மாவட்டத்தையும் கௌரவப்படுத்தினார்கள். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இவ்விழாவில் காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அறு சுவை உணவுடன் வழங்கினார்கள். இவ்விழாவின் நிறைவில் மாநில செயலாளர் ஹரிஹரன் நன்றி உரை வழங்கி விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள்.