வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் 25 ஆவது வெள்ளி விழா ஆண்டு சமூக சமத்துவ மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், இன்று திண்டுக்கல் தோமையபுரம் அருகே உள்ள மைதானத்தில் கோல் கால் ஊன்றும் நிகழ்ச்சி மற்றும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ஆணவக் கொலைகளை கண்டிப்பாக கண்டிக்க கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். எல்லா சமூகமும் இணக்கமாக போக வேண்டும். ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆணவக் கொலையானது, அரசியல் ரீதியாகவும் சமூக நீதி ரீதியாகவும் பிளவுகள் ஏற்படுத்த இது மாதிரி நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். அதில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்றம் தக்க தண்டனை கொடுப்பதன் மூலம் தான் எதிர்வரும் காலங்களில் இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். நீதித்துறையும் அரசும் இது மாதிரி வழக்குகளை உடனடியாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நீதி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு தான் உள்ளது. எங்கு பார்த்தாலும் போதையில் அடிபட்டு இளைஞர்கள் அழிகின்ற சூழலை ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மதுவை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம் என என கூறினார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. போதைப் பொருள்கள் இளைஞர்களை குறி வைத்து வளர்கின்ற இளைஞர் சமுதாயத்தை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. இதற்கு காவல்துறையினர் சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையும் அரசும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் ஆணவக் கொலைகள் நடைபெறாது.
ஆணவக் கொலைகளுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
லாக்கப் டெத் என்பது கண்டிக்கத்தக்க குற்றமாகும். அது காவல்துறையாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகம் தான். எனவே இதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர்கள் முனி செல்வம், முருகவேல் பாண்டியன், மாவட்ட செயலாளர் முத்து ரத்தினவேல் மாவட்ட தேசிய பூபதி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)