கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சி -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கள்ளபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கல்லூரிகளில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி, திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரியில் பயலும் 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிகளுக்கு பேருந்தில் சென்று பயின்று வருகின்றனர்.
கடந்த 29 – ஆம் அதிகாலை விடுதியில் தங்கி உள்ள 11 மாணவர்கள் வைத்திருந்த VIVO, OPPO, REALME,POCO உள்ளிட்ட சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து திருடி சென்று உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர் விடுதியில் சிசிடிவி கேமரா உள்ள நிலையில் மர்ம நபர்கள் புகுந்து 11 செல்போன்கள் திருடி சென்ற சம்பவம் மாணவர்களிடையே பல்வேறு நிலைகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.