புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு இரண்டாம் விதி பழனியாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்த பழங்கள் பலகாரங்கள் தேங்காய் வாழைப்பழங்கள் உள்ளிட்டவை வைத்து சிவாச்சாரியார்கள் பல்வேறு விதமான வேத மந்திரங்கள் முழங்கி பின்னர் சிவாச்சாரியார்கள் ஸ்ரீ பைரவர் மற்றும் ஸ்ரீ ப்ரத்யாங்கிராவிற்கு மாலை மாற்றி பின்னர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.