நாகர்கோவில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் உள்ள, குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற
புனித அல்போன்சா ஆலைய திருவிழாவின் முதல் நிகழ்வாக( ஜுலை_25) மாலை 6.30,மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பெளவத்துப்பறம்பில் ‘திருக்கொடியை’ புனித நீர் தெளித்து, தூபம் இட்டு அர்ச்சித்து
புனித அல்போன்சா ஆலய கொடியேற்றம் வான் மழை தூவி ஆசீர் செய்ய அன்னை புனித அல்போன்சா கொடியேற்றம். ஏராளமான இறைமக்கள், அருட்தந்தையர்கள் அருட்கன்னியர்கள், பங்கு மக்கள் கூடி நின்று பிராத்தனையுடன் அன்னையின் திருக் கொடி கொடிமரத்தில் உச்சம் தொட்டது.

நிகழ்வில் கோட்டார் மறைமாவட்ட அருட் தந்தை சதீஷ்குமார் ஜாய்,மறவன் குடியிருப்பு தஸ்நேவிஸ் ஆலய பங்கு தந்தை சகாய ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பேரருட் தந்தை
சுனில்ஜோண்பந்திச்சிறக்கல், துணை பங்கு தந்தை சன்ஜோ தெனப்பிளாக்கல் பங்களிப்புடன் கியூபர்ட்ராய் குடும்பத்தினர் மற்றும் தக்கலை பிலாங்காலை வட்டார இறைமக்கள் சிறப்பித்தனர்.
திருவிழா நாட்களில் முக்கிய நிகழ்வாக எதிர் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி. தக்கலை மறைமாவட்ட புனிதப் பயண நாளில். தக்கலை மறைமாவட்ட அருட் பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பங்குகளிலிருந்து இறைமக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். இன்று தொடங்கியுள்ள ஆலய விழா எதிர் வரும் ( ஆகஸ்ட் 3)ம் நாள் மாலை 4 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் நிறைவடைய உள்ளது.
https://arasiyaltoday.com/book/at01082025
திருவிழா நாட்களில் புனித அல்போன்சா விடம் மன்றாடி வரும் பக்தர்களின்
மன்றாட்டுகள் நிறைவேறுகிறது என்பது தொன்று தொட்டு பல சமூக மக்களின் நம்பிக்கையாக உள்ளது.