• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புரோட்டா மாஸ்டர் கொலை! தொழிலாளி கைது..,

BySeenu

Jul 25, 2025

கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வந்தவர் நவீன் புரோட்டா மாஸ்டர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டலில் தயாநிதி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இதனால் நவீனும், தயாநிதியும் ஹோட்டலில் அருகில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 22 ம் தேதி நவீன் அவரது அறையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவருடன் தங்கி இருந்த தயாநிதி மாயமாகி விட்டார். இதுகுறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது நவீனை அவருடன் தங்கி இருந்த தயாநிதி கேஸ் ஸ்டவில் உள்ள இரும்பு பர்னரை வைத்து தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதை அடுத்து காவல்துறையின் ஆணையர் சரவண சுந்தர உத்தரவின் பெயரில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் கோவையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் தயாநிதி பணத்தை எடுத்து விட்டு மதுரை பேருந்தில் ஏறி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை சென்று அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் மதுரையில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது அங்கு பேருந்து நிலையத்தில் தயாநிதி சுற்றி திரிவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தனிப்பட்டனர் விரைந்து சென்று நேற்று காலை தயாநிதி மடக்கி கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் போலீசார் அளித்த வாக்குமூலத்தில் கூறும் போது,

அவர் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள ஆவாரம்பட்டி கிராமம் என்றும், அவர் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவருடன் தங்கி இருந்த நவீன் தினமும் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க வற்புறுத்தி வந்ததாகவும், சம்பவத்தன்று அவரை வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் கேஸ் ஸ்டவ் பர்னர் கம்பியை வைத்து அடித்ததாகவும், இதில் அவர் இறந்து விட்டதால், பயந்து அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மதுரைக்குச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.