• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கோவை குற்றாலம் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..,

BySeenu

Jul 23, 2025

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் பகுதி கோவை குற்றாலம்.

வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கோடைகால வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இந்நிலையில் கடந்த மே மாதம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாக கோவை குற்றாலம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட கோவை குற்றாலம் கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையிலே, கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கோவை குற்றாலத்தில் நீராடுவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் வர வேண்டாம் என வனத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும் அருவிகளில் எந்த நேரமும் தீடிரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதனால், அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக, கோவை குற்றாலம் காலவரையின்றி மூடப்படுவதாக, வெள்ளப்பெருக்கு சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தந்து, கோவை குற்றாலம் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்று வந்த சுற்றுலா பயணிகள் அனுமதி அளிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.