• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று ஒரு நாள் மட்டும் ஸ்டேட்டஸ்ல வையுங்கள் பிளீஸ்

Byமதி

Dec 10, 2021

குன்னூர் காட்டேரி பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80% காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை நேற்று அதிநவீன ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூருவிலுள்ள விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அவரது உயிரை எப்படியாவது காப்பற்றிவிடு இறைவா என்ற வாசகங்கள் பொருந்திய புகைப்படம் ஒன்றை சமூக ஆர்வலர்கள் முக நூல்கள் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மெசேஜ் அனுப்பி வைத்து வருகின்றனர் இதை அனைவரும் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து வருகின்றனர்.