கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி பகுதியில் நரிக்குரவர் சமுதாய மக்களுக்கு என்று குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வîசிக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு கடன் உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் முயற்சியில் வேட்டைகாரர் தாட்கோ ஆதி திராவிடர் மற்றும் டிரைபல் அட்வான்ஸ்மெண்ட் சொசைட்டி எனும் சொசைட்டி உருவாக்கப்பட்டு அதற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் போடப்பட்டு இன்று அதன் பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தும், கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது, அவருக்கு அச்சமுதாய மக்கள் பாசி, மணி, பாசிகளை அணிவித்து மகிழ்ந்தனர். அப்போது அவர், உங்களின் வாழ்வாதாரம் உயர வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தருவேன் என்றும் அதனை முறையாக திருப்பிச் செலுத்தினால் வாகனம், வீடு கடன்களை பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அப்போது அவர்கள் கைககளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து மாநில அமைப்பாளர் விஜயகுமார் செய்தியாளரிடம் கூறியதாவது..
பழங்குடியின மக்கள் ஆன நாங்கள் சரியான படிப்பறிவு இல்லாமல் வாழ்க்கை குறித்து கேள்வி இல்லாமல் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று சூழ்நிலையில் எங்களுக்கும் நாகரிகம் குறித்த விழிப்புணர்வு தோன்றியுள்ளது. முன்பெல்லாம் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு ஒரு அதிகாரி வருவதற்கு தயக்கம் காட்டுவார். ஆனால் இன்று எங்கள் பகுதிக்கு வந்து எங்களுடன் வந்து அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டியாக தாட்கோ மேலாளர் இருந்தால் அவருக்கு எங்கள் மக்கள் மேலும் எங்களைப் போன்ற பழங்குடி இன மக்களை எஸ்டி பிரிவில் சேர்த்துள்ளதால் அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் எங்கள் மக்களுக்கு வந்து சேரும் அதன் மூலமாக நாங்கள் படிப்படியாக முன்னேறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மற்ற மாவட்டங்களில் உள்ள எங்கள் மக்களுக்கும் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.