திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் பகுதி இருந்த காலத்திலே, மன்னரால் அங்கிகாரத்துடன் அனாதை மடம் திடல்(ஆதரவற்ற வர்களுக்கு பயன் பாட்டு உரிமையாக கொடுக்கப்பட்ட நிலம்)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை. குமரி மாவட்டம் தமிழகத்திலே தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டம். குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த, நாகர்கோவில்
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து. குமரி ஆட்சியர் அழகு மீனா, வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் சென்று அனாதை மடம் இடத்தை பார்வையிட்டு அனாதை மடம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஏற்ற இடமாக உள்ளது என்ற அறிவிப்பு தின இதழ்களில் வெளியானது.

நாகர்கோவில் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
த.மா.க. உறுப்பினர் செல்வம் எழுப்பிய கேள்வி முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதாக அறிவித்துள்ளதற்கு நன்றி. ஆனால் மாநகராட்சிக்கு சொந்தமான இடமான, திருவிதாங்கூர் மன்னர் ஆதரவற்ற வர்களுக்கு(அனாதை மடம் திடலில்) தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அனைத்து உறுப்பினர்கள் ஆதரித்த நிலையில்.
நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலையில் (2009)ம் ஆண்டு அசோக் சாலமன் தலைவராக இருந்த போது. வருவாய் துறை அனாதை மடம் நிலத்தை கையகப்படுத்த முயன்ற போது. தலைவர் அசோக் சாலமன் உட்பட அனைத்து கட்சி வார்ட் உறுப்பினர்கள் சாலை மறியல் நிகழ்வு சில நாட்கள் தொடர் போரட்டத்தில் நகராட்சி தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் காவல்துறை கைது செய்த நிலையில்.
அனாதை மடம் நிலம் நகராட்ச்சிக்கு உரிமை பெற்ற நிலம் என அறிவித்ததை.
நாகர்கோவில் மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட நிலையில். வரலாற்று திருப்பமாக மீண்டும் அனதைமடம் நிலத்திற்கு, இன்றும் மீண்டும் போராட்டங்களம் காணும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என கோரிக்கை வைத்ததை அனைத்து உறுப்பினர்களும் மோஜயை தட்டி ஆதரித்த நிலையில்.

மேயர் மகேஷ் குமரி மாவட்டத்திற்கு தொழில்நுட்ப பூங்கா தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தவர்.அடுத்து சொன்னது. அனாதை மடம் பகுதி போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதி இங்கு தொழில்நுட்ப பூங்கா அமைந்தால் மேலும் நெருக்கடி ஏற்படுவதுடன்,இதே இடத்தில் தொழில்நுட்ப பூங்கா ஒரு வேளை அமைந்து விட்டால் அங்கு பணியாற்ற வரும் பல ஆயிரம் தொழிலாளிகள், அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு நிலை வாகனங்கள் இவற்றால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எப்படி எதிர் கொள்வது.
அனாதை மடம் திடல் பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன் படும் இடம். இந்த திடல் மூலம் மாநகராட்சிக்கு பல்வேறு வகைகளில் கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும்.
மாநகராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி. அனாதை மடம் திடலில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டாம் என்ற ஒற்றை புள்ளியியல் ஒன்றாக இணைந்து நிற்பதை இந்த மன்றம் வரவேற்கிறது.
நாகர்கோவில் அனாதை மடம் திடலை தவிர்த்து அஞ்சுகிராமம், கோணம், பார்வதி புரம் பகுதியில் ஒன்றை தேர்வு செய்யவும் பரிந்துரை செய்வதாக மன்ற கூட்டத்தில் அறிவித்ததும், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கை ஒலி எழுப்பி மேயர் மகேஷ் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தை கை தட்டி வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




