மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருமங்கலம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கார் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் எதிரையே குடோன் அதாவது நூற்றுக்கும் அதிகமான புதிய ரக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது இதில் காய்ந்த நிலையில் புல்கள் அதிக அளவு இருந்துள்ளது. திடீரென மள மளவென புகை கிளம்பி தீ பற்றி எளிய தொடங்கியது இதை கவனித்த கார் நிறுவன ஊழியர்கள் சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயிணை அணைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு சுமார் நூற்றுக்கும் அதிகமான கார்கள் தீ விபத்திலிருந்து தப்பியது. இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில் அதிக அளவு கார்கள் இருக்கும் பகுதியில் இது போன்ற காய்ந்த நிலையில் தீ விபத்திற்கு காரணம் எனவும் காய்ந்திருக்கும்.புல்கள் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதே இது இரவு நேரங்களில் நடந்த மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர். எனினும் தீயணைப்பு வீரர்களின் செயல்பாட்டினால் நூற்றுக்கும் அதிகமான கார்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.