மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி வளாகத்துக்குள் இன்று காலை வெறிநாய்கள் புகுந்து மாணவிகளை துரத்தி கடித்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவிகள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவிகளுக்கு முதலுதவி வழங்கி, அவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தது. வெறிநாய் தாக்கத்தில் மாணவிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30க்கும் மேற்பட்ட நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.