சென்னை நங்கநல்லூர் 167-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன் ஆவார். இவரது கணவர் நடராஜன். இவர் இதே பகுதியில் வட்டச் செயலாளராக இருக்கிறார். தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 துப்புறவு பணியாளர்களும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என தயாராக இருந்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கணவர் திடீரென்று பார்த்த போது ஆச்சரியம் அடைந்துள்ளார்.பின்னர் நடராஜன்,மாமன்ற உறுப்பினர், அப்பகுதி திமுக நிர்வாகிகளுடன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் இணைந்து கேக் வெட்டி தனது கணவனின் பிறந்தநாளை அனைவரையும் ஆச்சரியப்படும் வண்ணம் கொண்டாடினார்.பின்னர் துப்புறவு பணியாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் பிரியாணி வழங்கப்பட்டது.
