• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிறந்தநாள் கொண்டாடிய தவெக பொதுச் செயலாளர்.,

ByB. Sakthivel

Jul 18, 2025

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று தனது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

ஆனந்த் பிறந்தநாளை ஒட்டி பபுதுச்சேரி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினரால் கட்டவுட் மற்றும் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புஸ்சி ஆனந்திற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. டி. ஆறுமுகம் துணை சபாநாயகர் ராஜவேலுடன் ஆனந்தின் இல்லத்திற்கு வந்த அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஆனந்தின் நெற்றியில் விபூதி இட்டு வாழ்த்தினார்.

மேலும் பிறந்தநாள் கொண்டாடிய புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றார்.

தொடர்ந்து வாசல் வரை வந்து முதலமைச்சர் ரங்கசாமியை புஸ்சி ஆனந்த் வழி அனுப்பி வைத்தார்.