புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து கடலில் பயணம் செய்யும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை எவ்வாறு அப்புறவு படுத்துவது குறித்து காரைக்கால் கடற்கரையில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடலில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து அது கரையோர மீனவ கிராம பகுதிகளில் படர்ந்து இருப்பது போன்று அதனை நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், தீயணைப்புத் துறை வீரர்கள், இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் சுத்தம் செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் படையில் சென்று நடுக்கடலில் கலந்த எண்ணெ மாதிரி பரிசோதனை செய்ய எடுத்து வந்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகளை செய்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது துணை மாவட்ட ஆட்சியர் வெங்கடகிருஷ்ணன், இந்திய கடலோர காவல் படையின் கமாண்டிங் அதிகாரி கமாண்டன்ட் சௌமய் சந்தோலா, இந்திய கடலோர காவல் படையினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.