விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் சித்ரா மருத்துவமனை அதிநவீன இதய நோய் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதி சார்ந்த பாலன் என்பவர் இருதய நோய்க்காக சிகிச்சைக்காக நாடி உள்ளார் .

பாலன் என்பவருக்கு வயது 70 இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு மற்றும் 1982 ஆம் ஆண்டு 2009 ஆம் ஆண்டு என மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து நோயிலிருந்து விடுபட்டு வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் இருதயத்திற்கு செல்லக்கூடிய மைட்ரால் வால்வு கசிவு மற்றும் அன்யூரிசம் என்ற நோய் அதாவது இதயத்தின் முக்கிய இடத்தில் ஒரு பெரும் பகுதி கிழிவு ஏற்பட்டுள்ளது இதன் விளைவாக வீக்கம் இதயத்தின் பிரதான அறையில் ஏற்படுகிறது இதற்கான சிகிச்சை இதய அறுவை சிகிச்சை ( ஓபன் ஹார்ட் சர்ஜரி ) ஆனால் இது உயிருக்கு மிக ஆபத்தானது என்பதால் அறுவை சிகிச்சைக்கு பல மருத்துவர்கள் மறுத்துள்ளனர் .
இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கோபாலமுருகன் மற்றும் மூத்த இதய அறுவை நிபுணர் பிரசாந்த் வைசியநாத் இதய மயக்கவியல் நிபுணர் ரமேஷ் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆலோசனை செய்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட 70 வயது நோயாளிக்கு தொடையில் உள்ள நரம்புகளின் வழியாக இதயத்தின் கிழிவுகளை மூட முடியும் என ஆலோசனை செய்து பின்பு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் சுமார் 6 மணி போராடி வெற்றிகரமாக இதயத்தின் கிழிவு (அன்யூரிசம் ) மற்றும் மைட்ரல் வால்வும் மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து இரண்டு நாட்களில் நோயாளி வீடு திரும்பி செல்லும் அளவிற்கு உலகத்தில் எந்த மருத்துவரும் செய்ய முடியாத சாதனையை இராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளி பாலன் கூறும் பொழுது நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட வெளிநாட்டில் உள்ள பல மருத்துவமனை என பல்வேறு இடங்களில் கடந்த நான்கு மாதங்களாக அலைந்தும் தீர்வு கிடைக்காத நிலையில் சின்ன நகரத்தில் இந்த சித்ரா மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பும் இதற்கு மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.