• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈமு கோழி பண்ணை மோசடி நீதிமன்றம் தீர்ப்பு !!

BySeenu

Jul 15, 2025

ஈமு கோழி பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு கோழி பண்ணை வைத்து மணிகண்டன் என்பவர் நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் மணிகண்டன் தெரிவித்தபடி லாபத்தொகை எதுவும், கொடுக்கவில்லை. பணத்தை திரும்பி கொடுக்காமல் இழுத் தடித்து வந்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 105 பேரிடம் ரூபாய் 1 கோடியே 32 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதில் மணிகண்டன் 45 பேருக்கு பணத்தை திரும்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதம் உள்ளவர்களுக்கு பணம் திரும்பி கொடுக்கவில்லை, இதைத்தொடர்ந்து காவல் துறையின் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பின்னர் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ரூபாய் 84 3/4 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் பொருளாதாரம் குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகானந்தம் தலைமையிலான காவல் துறையினர் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.