பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரேமலதா, பிரதர்ஷினி என்பவர்கள் அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் தனியார் நிறுவன பாதுகாவலர் மதுரைவீரன் மீது புகார் அளித்தார்.

மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது வின்ச் நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாவலர் மதுரைவீரன் தன்னை தகாத வார்த்தையால் பேசி திட்டியதாக புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் அடிவாரம் காவல் துறையினர் மதுரைவீரன் விசாரணைக்கு அழைத்த வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கோயில் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த கோயில் அதிகாரிகள் பாதுகாவலர் மதுரைவீரன் மீது தவறு இல்லை என்பதை கூறி பாதுகாவலரிடம் தகராறு செய்ததாக பெண் பக்தர் பிரேமலதா மற்றும் பிரியதர்ஷினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் மதுரை வீரனை மட்டும் விசாரணைக்கு அழைத்து கைது செய்வதாகவும், கோயில் பாதுகாவலர்கள் அளித்த புகாரின் பேரில் பெண் பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி தாண்டியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மதுரை வீரன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் புரியாதபடி போராட்டத்தில் பாதுகாவலர்கள் ஈடுபட்டனர்.
பாதுகாவலர்களுக்கு ஆதரவாக கோயில் உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோயில் பாதுகாவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தால் மலையடி வாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.