விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனி
முப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கே குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார்உறவின் முறை மஹாசபை க்கு பாத்தியப் பட்ட பூரணி, பொற்கொடி சமேத ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி, வீரமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி முப்பழ அபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழகக்கம். இந்தாண்டுவிழா வெள்ளிக்கிழமை
திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை காலையில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பின்னர் கோயில் முன்பொங்கல் வைத்தும் முடிக்காணிக்கை
செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் விளையாட்டு போட்டிகள் , கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 12 மணி முதல் மூலவர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் முப்பழ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடைபெற்றது. சனிக்கிழமை காலை முப்பழ பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை முதுநிலை தலைவர் சோமசுந்தரநாடார் மற்றும் நிர்வாகக்
குழுத் தலைவர் , சந்திரமோகன்நாடார், துணைத் தலைவர் குருவையா,
செயலாளர் ஜெயச்சந்திரன் , இணை செயலாளர் சிவகாசி சந்திரசேகர், , பொருளாளர் மீனாட்சி சுந்தரேஸ்வரன், மற்றும் விழாக்குழுவினர்செய்திருந்தனர். மாநிலம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குடில்கள் அமைத்து சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டது.