விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சமூக அமைப்பினர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
நான் நான்கு ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போது வரட்சி, கஜா புயல், கொரோனா என பல்வேறு இயற்கை இடர்பாடுகளை சந்தித்தேன்.. மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தோம்..ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற அந்த நான்கு ஆண்டுகளின் எந்த விதமான இடர்பாடுகளும் இல்லை, இருப்பினும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
வர்த்தகர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்து உள்ளனர் அதன் அடிப்படையில் நான் விவசாயி, தற்போதும் நான் விவசாயம் செய்து வருகிறேன்.கடலூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிசை இல்லாத மாவட்டமாக அறிவித்து 1000 வீடுகள் காட்டிக்கொடுக்க பட்டது.
அதிமுக அரசு மக்கள் அரசு, தொழில் சிறப்பாக நடத்த அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. 40 ஆயிரம் கோடி கொரோனா காலத்தில் அரசு செலவு செய்தது. என்று குறிப்பிட்ட அவர் சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் கட்டுப்படுத்தியது.

ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் இல்லை.எல்லா தரப்பு மக்களுக்கும் பயன் தர கூடிய ஆட்சியாக அதிமுக ஆட்சி அமையும்.
கடலூரில் மக்கள் எதிர்பை மீறி பேருந்து நிலையத்தை மாற்றுவது சரியில்லை. இதற்காக நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக துணை நிற்கும்,2026ல் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்பி செல்வகணபதி, என். ஆர் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் N.S.J. ஜெயபால், பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். உடன் அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், தமிழக முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் ஆகியோர் உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)