விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 12வார்டு பகுதி விஐபி பகுதியென அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வீடு மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் செட்டியார் பட்டியில் உள்ள இரண்டு கவுன்சிலர் வீடு என இருப்பதால் இது விஐபி பகுதியினை அழைக்கப்படுகிறது.

இந்த தெரு பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ளது. அப்பொழுது குடிநீர் இணைப்புகள் அனைத்தும் சேதப்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குடிநீர் இணைப்பிற்கும் 1500 ரூபாய் லஞ்சம் வேண்டுமென செட்டியார்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் கேட்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் பேரூராட்சி தலைவர் இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் லஞ்சம் வேண்டுமென கேட்டு வாங்கும் அளவிற்கு அதிகாரிகளின் ஆணவப் போக்கு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்