சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பனிமலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப் படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,

மேலும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது,
அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கப் பெருமாள் கோவில் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதே போல் காஞ்சிபுரத்திலிருந்து இன்று காலை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார வயரும் ரத்து செய்யப்பட்டுள்ளது இதே நேரத்தில் காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கடற்கரை மற்றும் குமிடிப்பூண்டிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரயில்கள் ரத்தம் சில மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதிகப்படியான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் இதனால் தாம்பரம் பெருங்களத்தூர் குரோம்பேட்டை பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகப்படியான பயணிகள் குவிந்து பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர்,

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களிலும் அதிகப்படியான பயணிகள் ரயில்களில் கூட்டமாக பயணித்து வருகின்றனர்,