மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. இதனையோட்டி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில் “இந்தியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மைதீனுக்கு தமிழ்நாடு அரசு தகைசால் விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், இஸ்லாமிய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட்டவில்லை. நபிகள் நாயகம் காலம் தொட்டு வக்பு சட்டம் நடைமுறையில் உள்ளது, வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்கிற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.
அருள் தந்தை ஜெகத் கஸ்பர், ஆதீனம் உள்ளிடோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர், தனி தொகுதி போல இஸ்லாமியர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சிறுபான்மையினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்படும், விஜய் மற்றும் எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தால் மனித நேய மக்கள் கட்சி செல்லாது.
2021 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் திமுக நல்லாட்சி தந்து கொண்டு இருக்கிறது, திமுக தமிழகத்தை வளப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து விலக போவதில்லை. திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ப்பார், விஜய் தற்போது தான் அரசியலுக்குள் நுழைகிறார். விஜய் இதுவரை பார்ட் டைம் அரசியல்வாதியாக செயல்படுகிறார். விஜய் மற்றும் தவெக செயல்பாடுகளை வைத்து தான் மக்கள் அவர்களுக்கு வாக்கு அளிப்பார்கள். விஜய் முதல்வர் வேட்பாளர் என்பது பொறுத்தமான அறிவுபூர்வமான அனுபவபூர்வமான பிரச்சாரமாக கருதவில்லை” என கூறினார்.