மதுரை வாடிப்பட்டியில் உள்ள தனியார்(நம் வித்யா மந்திர்) பள்ளியில் சித்தாலங்குடியை சேர்ந்த அஜித் மற்றும் பவித்ரா தம்பதியின் மகளான முஹிஷா கடந்த கல்வி ஆண்டில் மத்திய மாநில அரசின் ஆர்டிஈ திட்டம் மூலம் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தார்.

பெற்றோர் இருவரும் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வருவதால் தங்களது குழந்தையினை பள்ளி வாகனத்தில் அனுப்பி வந்தனர். கடந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் கட்டிய அவர்கள் இந்த ஆண்டு யுகேஜி வகுப்பு சென்று அவருக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் செலுத்தினால் தான் குழந்தையை பள்ளிக்கு அழைத்து வர வேனை அனுப்புவோம் என்று பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி கழிவறைக்கு சென்ற குழந்தை முஹிஷா கழிவறையில் தாழ்ப்பாள் மூடிக்கொண்ட நிலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து அதற்கு பின் பள்ளியில் உள்ள நபர் ஒருவர் கழிவறைக்கு மேலே ஏறி சென்று குழந்தையை காப்பாற்றியுள்ளார். இது குறித்தும் விசாரித்த போது முறையான தகவல் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும் பதில் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்கள். யுகேஜி வகுப்பிற்கு இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாய் கட்டிய நிலையில் மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு பெற்றோரை துன்புறுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதனால் குழந்தை முகிஷா மற்றும் அவரது பெற்றோர் அவரது உறவினர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் குழந்தை தானும் பள்ளிக்குச் செல்வேன் என்று அடம் பிடித்து வருவதாகவும் இதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறவினர் வீட்டில் குழந்தையை கொண்டு விட்டுச் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். இது குறித்து தொடக்கக் கல்வி அதிகாரி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
பள்ளிகளில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டிய பள்ளி கல்வித்துறை இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட அஜித் பவித்ரா தம்பதியினர் குழந்தை முஹிஷாவை பள்ளியில் சேர்த்து தகுந்த கல்வி வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகள் ஏழை குழந்தைகள் படிக்கும் நோக்கில் ஆர்டிஇ மூலம் சலுகை கல்வியினை வழங்கி வருகிறது அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.