விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலையில் நடராஜருக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேத்தூர் கண்ணீஸ்வரர் திருக்கோயில், இராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்களிலும் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.