கழக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான்நசரேத் அவர்கள் தயாரித்த திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான்நசரேத் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் K_T_பச்சைமால் அவர்கள் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் V_M_ராஜலெட்சுமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் மகளிர் அணி சார்பிலும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு உபசார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னைக்கு வெளியே ஒரு படதயாரிப்பாளருக்கு முழுமையான ஒரு பாராட்டு விழாவாக நடந்தது.