ஜூன் 30 இன்று மேலவளவு அரசியல் உரிமை போராளிகளின் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மேலவளவு கிராமத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விசிக சார்பாக வழங்கி உள்ளோம்..
இன்றைக்கும் கிராமத்தில் சுடுகாட்டு பாதை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது..

கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா கூட இல்லை அதனை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்..
தலித்துக்கள் மீதான வன் கொடுமை நடைபெறுகிறது.
தலித்கள் வன்கொடுமைக்கு மீதான புகார் அளிக்கும் போது காவல்துறையினர் எதிர்தரப்பினரிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பது தொடர்கிறது.
தலித்து விரோத நடவடிக்கையாக உள்ளது..
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் குற்றச்செயலாகும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்குகளை துடிக்கின்ற காவல் துறை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசியல் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயக படுகொலை..
இந்த தீர்ப்பை தொடர்பு வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறையினர் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..

திமுக காங்கிரஸ் கட்சியினர் இந்த உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் திருமாவளவன் வேண்டுகோள். ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என விடுதலை சிறுத்தை கட்சி பார்க்கிறது.
இந்த தீர்ப்பை ஏற்புடையதல்ல.. அரசியல் உரிமைகளை பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்ற அணைய வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு விடை அளித்துள்ளார் அந்த பதில் பாஜகவிற்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கூட்டணி ஆட்சி இங்கே இல்லை அதிமுக இதற்கு உடன்படாது என விடையை பாஜகவினருக்கு சொல்லி இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ள முடிகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் போது அதிமுகவுடன் விசிக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு. …அப்படி ஒரு நிலை வரும்போது கேள்வி எழுப்புங்கள் பதிலளிக்கிறேன்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் நடைபெற்ற லாக்கப் டெத் குறித்த கேள்விக்கு,
போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பிறகு விசாரணையில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் அவரது தம்பியையும் போலீசார் தாக்கியுள்ளனர். எனது அண்ணன் மரணத்திற்கு காரணம் காவல்துறை தாக்கியது எனக் கூறினார். இது குறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும். இனிமேல் வரும் காலங்களில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் மரணம் நிகழக்கூடாது.
திடீரென ராமதாஸ் மீது திருமாவுக்கு பாசம் ஏன்?
பாசம் என்பது மிகவும் வலிமையான வார்த்தை நாங்கள் தந்தை மகனுடைய ஏற்படும் பிளவுனால் அக்கட்சிபாதிப்படைய கூடாது என்ற காரணத்திற்காக
அந்தக் கட்சி சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது போன்ற காரணங்களுக்காக மட்டுமே அவருடன் பேசினோம் இதில் வேறொன்றும் இல்லை என திருமாவளவன் கூறினார்.